ஏகலைவன் யார்?
ஏகலைவன் என்றொரு வேடன் இருந்தான். அவன் இரண்யதனுசு என்னும் வேடராஜனுடைய பிள்ளை. நல்ல குருவைத் தேடி வில்வித்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அவனுக்கு உண்டாயிற்று. ‘குரு இல்லா வித்தை பாழ்’ என்று சொல்லியிருக்கிறார்கள் அல்லவா ?

ஏகலைவன், துரோணர் என்கிற வில்லாசிரியரைத் தேடிப் போனான். அவர் பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் வில்வித்தை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அவரை ஏகலைவன் பணிந்து “என்னை மாணவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று வேண்டிக்கொண்டான்.
துரோணர், “நான் ராஜகுமாரர்களுக்கு வில்வித்தை கற்றுக் கொடுக்கிறேன். உனக்குக் கற்றுத்தர நேரமில்லை. ஆயினும் உன்னை என் மாணவனாக ஏற்றுக்கொண்டேன். நீ வில்வித்தையில் வல்லவன் ஆவாய்! போ!” என்று ஆசீர்வதித்து அனுப்பினார்.

ஏகலைவன் அவரையே குருவாகக் கொண்டான். தன் இருப்பிடமான காட்டிற்குச் சென்றதும் துரோணரைப் போல ஒரு சிலை செய்து வைத்தான். அதன் முன் இருந்து பயபக்தியோடு தினந்தோறும்
வில்வித்தை பயின்று வந்தான். குருவிற்குச் செய்யவேண்டிய வந்தனை, வழிபாடுகளை அந்த சிலைக்குச் செய்தான்.’குரு பக்தி’ காரணமாக, அவனுக்கு, வில்வித்தைகளும் கைகூடி வந்தன.
ஏகலைவன் நாளடைவில் சிறந்த வில்லாளியானான். அப்பொழுது, ஒரு சமயம் கவுரவர்களும் பாண்டவர்களும் துரோணாச்சாரியாருடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார்கள். வேட்டையாடிக்கொண்டே ஏகலைவன் இருக்கும் பகுதிக்கு வந்தார்கள். அப்போது ஏகலைவன் பக்கமாக ஒரு நாய் ஓடியது. அது அவனைக்கண்டு குரைத்துக்கொண்டே கடிக்க வந்தது. அவன் அதன்வாயில் ஏழு அம்புகளை ஒரே கொத்தாகப் பாயும்படி விட்டான்.
பாண்டவர்களும் கவுரவர்களும் ஒரு நாயின் வாயில் ஏழு அம்புகள் ஒரு சேரப் பாய்ந்திருப்பதைக் கண்டு, “இப்பாணங்களை எய்தவன் யார் ? அவன் மிகவும் திறமைசாலியாக இருக்க வேண்டும்” என்று எண்ணி ஆச்சரியப்பட்டார்கள். அவனைத் தேடிக்கொண்டே வந்து வில்லும் கையுமாக நிற்கும் ஏகலைவனைக் கண்டு “நீதானா நாயின் மீது அம்பு எய்தவன் ? நீ யாரிடம் வில்வித்தை பயின்றாய்?” என்று கேட்டனர்.
ஏகலைவன், “நான் வேடராஜனாகிய இரண்யதனுசுவின் மகன். துரோணருடைய மாணவன்” என்றான். அதைக் கேட்டதும் அவர்கள், “இவனெங்கே துரோணரிடம் படித்தான்” என்று எண்ணி ஆச்சரியப்பட்டு துரோணரைக் கேட்டனர்.
அப்போது பாண்டவர்களில் ஒருவனாகிய அர்ஜுனன் துரோணரைப் பார்த்து “உன்னைவிட மேம்பட்ட திறமை கொண்ட மாணவன் இல்லை” என்று சொன்னீர்களே! வேடனொருவன் என்னைவிட மேம்பட்டவனாக இருக்கிறானே, அது எப்படி ? என்று கேட்டான்.“துரோணர்,” எல்லோரும் ஏகலைவனிடம் சென்றனர்.
ஏகலைவன் துரோணரைக் கண்டதும், அவனுடைய காலடியில் தன் தலைவைத்து வணங்கி, என்னை ஆசீர்வதிக்க வேண்டும்” என்றான்.துரோணரைப் போல் உருவம் செய்து குரு வழிபாடு செய்து வித்தை பயின்றதையும் சொன்னான்.

ஏகலைவனை அர்ஜுனனுக்குச் சமமாக வைக்கத் துரோணருக்கு விருப்பமில்லை. ஏனெனில், “அர்ஜுனா, உனக்குச் சமமான “” அல்லவா? அதைக் காப்பாற்ற வேண்டாமா?
ஏகலைவன் “குருவே கட்டளையிடுங்கள்” என்றான். “துரோணர்,” என்று கேட்டார்.
ஏகலைவன் சிறிதும் மனம் கோணாமல் தன் வலதுகைப் பெருவிரலை வெட்டித் தந்தான். துரோணர் அவனது குருபக்தியைப் பாராட்டி அவனுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும்படி ஆசீர்வதித்தார்.பெருவிரலின் உதவி இல்லாமற் போகவே, ஏகலைவன் முன்போல் அஸ்திரம் எய்ய முடியாதவனானான். அது கண்டு அர்ஜுனன் நிம்மதி அடைந்தான்.
